நாழிகை நகர்வுகளை
கடிகார முள் காட்டி சுமப்பதில்லை
இயக்குதல் சுயேச்சை
இயங்குதல் அனிச்சை
நிசியில் நனைந்த
மை தொட்டு இட்டு
கடந்த வழிக்கு அடையாள குறியீடு
வழுக்கி விழுகிற தேடல்களில்
இழுத்து சொருகிய நம்பிக்கை
பாத சுவடுகளுக்கும்
பதியும் பரப்புக்குமான
அடர்வு முத்தமாய்
அடுத்த நிமிடத்தை நோக்கி