வெறுப்பு விருப்புகளுக்கு ஏற்ப
சுழலாத திசைமானி
சுமக்கும் கப்பலாய்
செலுத்தும் மாலுமியாய்
மூழ்கி பயணிப்பது
முடிவறியா பெருங்கடலில்
தாகம் தீர்க்க ஒரு துளி தேடி
நெடுவழி தோறும்
முரண்கள் குறுக்கே
முடங்கிவிடாத
கவனம் ஒருபுறம்
முந்தி செல்லுதலில்
வேகம் ஒருபுறம்
ஈர நிலம் தேடி
விதைத்து
கூட்டத்தை சமைக்க
ஒற்றை நெல்மணி
சுடுதனலோ
கடுங்குளிரோ
குடைநிழலாவது அவனது மாட்சி
கடந்த பாதையில்
பாத சுவடுகள்
பதிந்ததா
அழிந்ததா
கணக்கீடு காண
தகையா பொழுதுகள்
அவனாய் இருத்தலின் கற்பனை
தரைத்தட்டிய கப்பலை
கண்ணுற்ற பிரமிப்பு !!