பிணியுற்ற பொழுதும் நன்றே
உயிர் துடிப்போசை நுகர..
உவந்து நோக்கலில் அழகாய்
பனிமூடிய மலைச்சரிவில் தவறவிட்டதொரு குடை
ஒற்றை கோபுர உச்சியில் எவருக்கு என்றில்லாமல் சுடரும் நெய்விளக்கு
சுட்டெரித்தாலும் அஸ்தமன நேரத்தில் அள்ளிபருகவே தாகவிடாய்
தனிதிருத்தலின் தவ முறிவு வரமே எனில்!!