நட்சத்திரம் நகர்கிறது-என் பார்வையில்

Natchathiram Nagarkirathu

1
2865

சாதியங்களை ஆதரிக்கிற அல்லது  வெறுக்கிற,மறுக்கிற, ஒதுக்குகிற கூட்டங்களில் நானொருத்தி கிடையாது.
“சாதிகளே இல்லையடி” என்பதே என் நிலைப்பாடு.
ஆகையினால் படத்தின் முக்கிய பேசுபொருளான சாதியத்தை தவிர்த்துவிட்டு
பாத்திரங்களில் சொல்லபட்டிருக்கின்ற அல்லது நான் புரிந்துகொண்ட மனிதயியல் பற்றி மட்டும் எழுதுகிறேன்.

சமூக சூழலுக்குள் கட்டுண்ட வெவ்வேறு  மனிதயியலை பேசுவது மாதிரி தான் படம் பார்க்கும் பொழுது  எனக்கு பட்டது.

சமூக கட்டும், மனித
பாத்திரங்களும்.


அர்ஜுன் – இந்த  முதலாம் பாத்திரம் தான் சமூகத்தில் முக்கால் வாசி நிறைந்திருக்கிறார்கள்.

1. எந்நேரமும் அடுத்தவர்கள் என்ன செய்கிறார்களென்றே பார்த்துக்கொண்டிருப்பது.

2. தனக்கு சம்பந்தம் இல்லாத விஷயங்களிலும்   மூக்கை நுழைத்து கருத்து சொல்வது.

3. அடுத்தவர்களிடம் குறைகண்டு கொண்டே இருப்பது. அதே சமயம் தன் குறைகளை எவரும் சுட்டினால் தாங்கிகொள்ள முடியாதது.

4. ” வீட்டினர் எனக்கு பார்த்துவைத்த வருங்கால துணை நீ. உனக்கென தனி ஸ்பேஸே கிடையாது. எனக்கானவள் நீ. இனி நான் நினைக்கிற பொழுதெல்லாம் என் முன்னே தரிசனம் தரவேண்டும். இயலாத போது ஒரு செல்ஃபியாவது..
எங்கே நீ என்ன செய்து கொண்டிருந்தாலும் அதை எனக்கு ஒப்பித்தாக வேண்டும். உனக்கு பிடிக்கிறதோ இல்லையோ எனக்கு வேண்டியபொழுதெல்லாம் என்னை திருப்தி படுத்திக்கொண்டிருப்பதே உன் கடைமையென அடுத்த உயிரின் மேல் தன் தேவைகளை திணிப்பது. இந்த இடத்தில் காட்டப்படுவது துச்சம்.

5. ரெனே மாதிரியானதொரு, எதர்க்குள்ளும் கட்டுற விரும்பாததொரு  சுதந்திர உயிரியை பார்த்து
” நீ கண்டபடி கண்களை உறுத்துகிற வண்ணம் ஆடையணிந்து,கண்ட  ஆடவர்களோடு சுற்றுகிற, சரக்கடிக்கிற, திணவெடுத்து திரிகிறவள்,
பெண் எப்படியானவளாக இருக்கவேண்டுமென்பதற்கான  வகுத்திருப்பில் அடங்காமல்  இஷ்டத்திற்கு நடக்கிறவள் தானே.. உன் மேல் அட்வாண்டேஜ் எடுத்துக்கொள்வதில் என்ன தவறு!? நானும் ஆண்தான். வொய் நாட் வித் மீயென தலைகேறிய போதை திமிறோடு அடுத்த உயிரின் மேல் அத்துமீறல்  செய்வது.
இந்த இடத்தில் காட்டப்படுவதும் துச்சம்.

6. ஒரு பெண்ணிடம் தன் காதலை அறிவித்தப்பின் அதை அவள் ஏற்றுதான் ஆகவேண்டுமென்கிற நினைப்பில் அவளின்
விருப்பமினமையை அழுத்தமாக சொல்லி மறுத்தபின்பும்.. காதல்/ அன்பை அடுத்த உயிரின் மேல் திணிப்பதுவும் அத்துமீறல் தான்.

7. நீ மறுத்தாலும் எப்படியும் என்னிடம் வந்துதானே ஆகனும்ங்கிற கர்வ மிகுதி.
அடுத்த உயிரியின் விருப்பு வெறுப்புகளை சட்டை செய்யாமல் வீட்டினர் முன் தன் காதலை அறிவிப்பது.
இப்படியானவர்கள் சுயநலவாதிகள்.
தன் காரியத்தை சாதித்துகொள்ள அடுத்தவர்களை சுரண்டுகிற/ சார்ந்திருக்கிற/ பயன்படுத்திக்கொள்கிற மற்றும் பல..

என்ன நான் சொல்வது!? முக்கால்வாசி இவர்கள் தானே!?

அடுத்து இனியன்
பூட்டிவைத்துக்கொள்வதோ அன்றி  திறந்து வைத்து வாழ்வதோ என் வாழ்வு.. என் சுயதேர்வு. ஆனால் சாவி அடுத்தவர்களுடையதென்றென்னும் குழப்பமான மனோபாவம் உடைய ..   தன்னிரக்க/சுயபச்சாதாப  பாத்திரம்.

போலவே

வேண்டாத வெறுப்போடு கட்டாயத்தின் பேரில் திருமணம்.. பிடிக்காத மாப்பிள்ளையை வெறுமனே முறைத்துமட்டுமே பார்க்க முடிந்த..
வாழ்வும் எனது, பூட்டும் சாவியும் எனதே. எனினும்  நான் பூட்டி வைப்பதற்கும், திறந்து கொள்வதற்கும் அடுத்தவர்களின் அனுமதி  தேவை என்கிற கையறு நிலையில்..
அர்ஜுனுக்கு நிச்சயிக்கப்படும் ரோஷினி.

இதையெல்லாம் உடைத்தெறிகிற கணக்கில் வாழ்நாளெல்லாம் தான் பிடிக்காதை சகித்து ஓய்ந்தது  மாதிரி இந்த கல்யாணமும் நடந்துவிடக்கூடாதென தாலியை  தரமறுத்து பேரன் திருமணத்தை நிப்பாட்டுகிற  அர்ஜுனின் பாட்டி.

பொதுமைகளுக்கு நடுவே முற்றிலும் எதிர்கோணத்தில் ஒரு பாத்திரத்தை படைத்தால்!!

அவளே

எவரையும், எதையும்  பொருட்படுத்தாத,
எந்த சாவிக்கும் காத்திராமல், எல்லா பூட்டுகளையும் உடைத்தெரிந்து தன் வழியே போகத்துணிந்த,

பெயரில் கூட இன மொழி மத அடையாளங்களை தூக்கிச்சுமப்பதை வெறுக்கிற,

இனியனோடு உறவு முறிதலுக்குப்பின்பும்
கூடவே வேலைசெய்யும் பொழுதும் நிந்தித்திடாத,

அர்ஜுனுக்கு  திருத்திக்கொள்ள  ஒரு வாய்ப்பு கொடுக்கிற,

நிறைய
நல்லதனங்களோடு கூடவே
நிறைய குறைகளுக்கும் குறைவில்லாத, 

தன்னிச்சையான..   கூடவே கூட்டத்தோடு குழுமி வாழத்தெரிந்த

மற்றும்
காதல் வேண்டுமா அல்லது காலுக்குதவாததை கழட்டி விடனுமா / கவலைப்படனுமா அல்லது கடந்துபோகனுமா / மீண்டுமொரு, மற்றுமொரு துணை வேண்டுமா/
திருமணம் வேண்டுமா / பிள்ளைகளை பெற்றுக்கொள்ளவதா!/ surrogacy !/ அல்லது தத்தெடுத்ததலா !!!?

தனக்கான/
தன்னிறைவிற்கானவைகளிலெல்லாம்..
போற்றுவார் போற்றாலையும்
தூற்றுவார் தூற்றலையும் தலைக்கேற்றிக்கொண்டிறாத
மிணுங்கலோடு
நகர்கிற நட்சத்திரங்களே
ரெனேக்கள்
.

Bhuvanam

10/11/2022

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here