நெடுநல் அத்தியாயம் -13

0
353

“இல்லம்மா இதோ நானே கீழே வரேன்” யசோதை வாரிச் சுருட்டிக்கொண்டு எழுந்தாள். 

“பாப்பா என்னம்மா இது..! அது சரியா இருக்காது. தனியா பேசனும்ன்னு கேக்கும்போது! 

 மாப்பிள்ளைதானேம்மா நாளைக்கு கல்யாணம் முடித்து அவர் கூட தானே காலமெல்லாம் வாழப்போற. ஐந்து நிமிசம் தனியா நின்னு பேசி பழகிக்கம்மா” என்றுவிட்டு போனாள். 

யசோதைக்கு திக்கென்றது!

மாப்பிள்ளையானவனின் பார்வையும் பேச்சும்! 

போன் பேச்சிலேயே யசோதைக்கு அருவெறுத்துப்போகிற நிறத்தில் பேசுகிற அவன்  நேரில் தனியாக என்னவென்று எப்படியெல்லாம் பேசுவானோ! 

எப்படி சகித்து முகம் மாறாமல் காதால் கேட்பது,! 

யசோதை வினாடியில் யோசித்து அறைக்கு வெளியே வந்து நின்றாள்.  படிகள் ஏறினதும் நேராக அவள் அறைதான் தெரியும். என்பதால் கீழே நடமாடுகிறவர்களின் கண்படும் இடத்தில் நின்று பேசினால் அவன் பேச்சில் கொஞ்சம் இங்கிதம் இருக்கக்கூடும். 

ஆனால் அவனோ..!  படிகளை இரண்டிரண்டாக ஏறி வந்தவன் ” எனக்காக காத்திருக்கிறாயா டார்லிங். 

நானும் உன்னை தனியே பார்க்க தவியாய் தவிச்சிட்டிருந்தேன். கீழ பெரிசுகளுக்கு அதெங்கே புரியுது..” அவளை நெருங்கி நின்று இரகசிய குரலில் பேசினான். 

யசோதை இரெண்டெட்டு பின்னால் போனாள். அவனும் இரெண்டெட்டு அருகில் நெருங்கி வந்தவன் 

“இதுதானே உன் அறை வா” ஒரே இழுப்பில் அவளை உள்ளே தள்ளிக் கதவையும் அடைத்து தாழிட்டுவிட்டான்.

யசோதை செய்யவதரியாது திகைத்துப்போயிருந்தாள்.   

அவளுக்குள் சிலவருடங்களாக உறங்கிக்கொண்டிருந்த பயம் எனும் பிசாசு விழித்து மேலெழுந்திருந்தது.

 இதயம் பந்தயக்குதிரையின் வேகத்தைத் தாண்டி துடித்தது. நெஞ்சு படபடத்து உடல் நடுங்க தொடங்கியிருந்தது. ஆனால் அது எதையும் அவன் கண்டு கொள்வதாயில்லை. 

“இந்த சேலையில் நீ அப்படி இருக்க! அப்படியே  கடிச்சு சாப்ட்றனும் போல! என்னவொரு வளைவான இடுப்பு உனக்கு ..” அவள் புறம் கையை நீட்டி 

அவளின் சேலை மூடாதிருந்த இடையில் தடவத்தொடங்கினான்.

யசோதாவிற்கு வெலவெலத்தது.

அவள் யாரையும் தொட்டுப்பழகுகிறவள் இல்லையே. யாரிடமிருந்தும் நான்கெட்டு தள்ளி  நின்றே பேசிப்பழகியவள். 

அவனின் கையை தள்ளிவிட்டு விலக பெரும்பிரயத்தனப்பட்டாள். ஆனால் அவன் விடவில்லை. அவனின் கைகள் அவளின் உடலெங்கும் மேய்ந்தது

“என்கிட்ட என்ன தயக்கம் உனக்கு. போன்ல தான் பேச வெக்கப்பட்ற, உன்னையே நினைச்சு அங்கிருந்து இத்தனை மைல் தூரம் வந்திருக்கேன் புரியலையா உனக்கு!”    

“இல்ல த்தொ..டவே..ணாம் ப்ளீஸ்” என்றவளின் குரல் அவளுக்கே கேட்கவில்லை.கெஞ்சுதலாக  திக்கி திணறியதே ஒழிய குரல் எழுப்ப முடியவில்லை. 

“அப்புறம் தொடாமல்! கல்யாணம் பண்ணி உன்கூட என்ன பல்லாங்குழியா விளையாடப்போறேன். உனக்கு நாந்தான்னு முடிவாயிடுச்சே அப்புறமென்ன சும்மா ஒரு ஐந்து நிமிசம் ஆசைக்கு தொட்டுக்கிறேன் பேசாம இரு” 

அவளுக்கு பிடிக்கவில்லை என்று அவள் மறுத்தால் அதை மதித்து விலகுகிறவன் அவன் இல்லை என்பதை காட்டினான். 

பயப்பிசாசுகள் அந்த அறையெங்கும்  தோன்றி கோரப்பற்கள் தெரிய கெக்கலி கொட்டி நகைத்தவாறே ஆக்டோபஸ் கரங்கள் நீட்டி அவளை அவனிடம் பிடித்துக்கொடுக்க முயன்றன. 

யசோதை விலகி ஓட முனைந்தாள். 

அவனைத்தாண்டி கதவறுகே அவளால் ஓடிவிட முடியாது. 

மேலும் இரண்டெட்டுகளுக்கு பிறகு பின்னுக்கு நகர இயலாத குளியலறை கதவிற்கும் துணி அலமாரிக்குமான இடுக்கில் அகப்பட்டாள். 

அவளின் நடுங்கிக்கொண்டிருந்த  உடலை  சுவறோடு அழுத்திப்பிடித்து 

கண்மண் தெரியாததொரு வேக வெறியுடம் முகமெங்கும் முத்தங்களை சொறிந்தான் அவன்.

பின்னால் சுவரும், அவனின் முழு உடலும் அவள் மேல் அழுந்திக்கொண்டிருப்பதில் திணறி பலம் கொண்டமட்டும் விடுவித்துக்கொள்ள போராடினாள்.

கத்திவிட முனைந்தாள். 

அவன் எரிச்சலானான் 

 அவளின் இதழ்களில் மூர்கத்துடன் முத்தமிடத்தொடங்கினான். பற்களால் அவன் அழுத்திக்கடிப்பதில் அவள் வலி தாங்கமாட்டாது தவியாய் தவித்தாள். மூச்சுக்கு திணறினாள்.

கதைப்புத்தகங்களில் அவள் வாசித்திருந்த முத்த தன்மைகள் வேறாயிருக்க இந்த வன்முறை தாக்குதலோடான  மூர்க முத்தத்தின் கொடூர வலி தாங்கொணாததாய் அவள் தவித்தாள். 

மூச்சு வாங்க அந்த முத்தத்தை முடித்து நிமிர்ந்தவன் அவள் சத்தமிட முடியாதவாறு ஒரு கையால் அவளின் இரு புற கன்னங்களையும் அழுத்திப்பிடித்து,அவளின் வாயை குவித்துவைத்துமற்றொரு கையால்  பேண்ட் பாக்கெட்டில் இருந்து கர்சீப்பை எடுத்துச்சுருட்டி அவளின் வாயில் வைத்து அடைத்தான். 

யசோதை அவனிடம் விட்டுவிடும்படி கண்களால் கெஞ்சினாள். 

அவளுக்கு கண்கள் இருளத்தொடங்கியிருந்தது. மொத்த அறையும் கருந்திரள் சூழ்ந்தது. அறை சுழல்வதைப்போல் ஆனது  

ஆனால் அவனோ அடைத்திருந்த  துணியின் மேல் அவனின் கட்டைவிரலை வைத்து அழுத்திபிடித்தபடி ” உனக்கு சொன்னாப் புரியாது!வீட்டுக்குள்ள வந்ததிலிருந்து உன்னை தொட்டு பார்க்க தவிச்சிட்டிருக்கேன். எத்தனை நாள் போட்டோவை பார்த்து.. ” 

சொந்த வீட்டில் அவளின் சொந்த அறையில் தன் மேல் நிகழ்த்தபடும் இந்த வன்முறை அத்துமீறலை எதிர்த்து ஒரு சுண்டு விரலைக்கூட அசைத்துவிட திராணியற்றவளாய் தவித்துப்  போராடிக்கொண்டிருந்தாள். 

அவனின் கீழாடையை தளர்த்தி  ஆணுறுப்பை வெளியே எடுத்தான் அவன்.  யசோதைக்கு அருவெருப்பு மிகுந்துவிட்டிருந்தது 

“இங்கே பார், உனக்காகவே ஏங்கி.. “மேலே ஏதேதோ கொச்சையாக பேசியபடியிருந்தவன்.. அவள் அப்படியே மயங்கிச் சரியவும் திடுக்குற்று நிலைமையை வெளியே பிறர் அறிந்து விடும்முன்  சீருக்குள் கொண்டுவர.. காதல் விளையாட்டென வாயிலடைத்திருந்த கைக்குட்டையை எடுத்து, நீர் தெளித்து, கன்னத்தில் தட்டியென அவளை தெளியச்செய்தான். 

தெளிவற்ற பார்வையும் உடல் நடுக்கமுமாக பயம் தெறிக்கும் அவளின் விழிகளை கண்டும் குற்ற உணர்வு எதுவுமே இருக்கவில்லை போலும் அவனுக்கு ..

“ ஹேய் என்ன நீ இதுக்கே இப்படி மயங்கி விழுந்தேனா..! சரி போகட்டும். அப்புறம் நிதானமா பார்த்துக்கலாம்” என்றபடி செல்லமாக அவளின் கன்னத்தில் தட்டிவிட்டு குவளையில் மீதமிருந்த நீரைப் பருகிவிட்டு கதவைத் திறந்து வெளியேறிவிட்டான். 

யசோதை அப்படியே தரையோடு தரையாக சமைந்திருந்தாள். 

மாப்பிள்ளை வீட்டினர் கிளம்ப காத்திருந்து, மகளுக்கு உணவை தட்டிட்டு மூடி அறைக்கு எடுத்து வந்த காயத்திரி மகள் தரையில் கிடந்த கோலத்தைக் கண்டு பதறிவிட்டாள். 

காயத்திரி காலையிலிருந்தே மகள்  மயக்கம் போட்டு விழுந்துவிடக்கூடாதே என பயந்துகொண்டேதான் இருந்தாள்.  

அதிக கூட்டத்தை கண்டால் ஒவ்வாது யசோதைக்கு. 

இதற்கு பயந்தே அவளை கூட்டமிகுந்த பகுதிகளுக்கு அழைத்தே போவதில்லை. தனியே எங்கும் போகவிடுவதுமில்லை. 

இன்றைய விஷேசத்திற்கு வீடு நிறைய சேர்ந்திருந்த ஆட்களையும் மகளின் சோர்ந்த முகத்தையும் பார்த்து உள்ளூர பதைத்து கொண்டேதான் இருந்தது. 

எப்படியோ மகள் சமாளிக்கிறாளேயென ஆறுதல் கொண்டிருந்தாள். 

இன்னமும் சாப்பிடாதது வேறு கடவுளே.. 

நிலைக்குத்திய பார்வையோடு நடுங்கிக்கொண்டு  அதிர்ந்தமர்ந்திருந்த மகளை “பாப்பா, இங்க பாரு கண்ணு, எழுந்திரிம்மா. எழுந்துக்க”

கடவுளே மகளுக்கு எந்த தொந்திரவும் இல்லாம எல்லாம் சரியாகி  இந்த ஆறேழு வருசமா எல்லாம் சரியா இருக்குன்னு இருந்தாளே.. 

காயத்திரி மகளின் அருகே அமர்ந்து  அவளை பலவாறு பேசி தேற்றி அமைதிப்படுத்தி எழுப்பி படுக்கையில் அமர்த்தினாள். 

பருக நீரை எடுத்துக்கொடுத்தாள். வற்புறுத்தி,  உணவை ஊட்டிவிட்டு எப்படியோ இரண்டு வாய் உண்ணச்செய்தாள்.

ஓரளவு தெளிந்து நிதானத்திற்கு வந்தபின்      யசோதை தன் மேல் இருந்த நகைகளையெல்லாம் ஒரு பொட்டு விடாமல் கழட்டித் தாயிடம் தந்துவிட்டு சேலையில் குத்தியிருந்த பின்னூசிகளைக் கூட பொருட்படுத்தாமல் அதீத  வெறுப்புடன் அவிழ்த்து எறிந்தாள். 

“எனக்கு இந்த சேலை வேண்டாம்மா தூர வீசிடுங்க.”

யசோதைக்கு  எத்தனை முயன்றும் அந்த நினைப்பில் இருந்து வெளிவரமுடியவில்லை. 

குமட்டி குமட்டி வாந்தியெடுத்துக்கொண்டிருந்தாள். ஒரு கவளம் உணவையும் அவளுக்கு விழுங்க முடியாமல் இருந்தது. அம்மாவின் வற்புறுத்தலில் உண்டதுதான்.

இரவோடிரவாக காய்ச்சலே வந்துவிட்டது. அனத்தியவாறே படுக்கையில் சுருண்டு கிடந்தாள். சுர வேகத்தில் அவளின் புலம்பல்கள் நிக்கவே இல்லை. 

இப்படி பயந்து நடுங்கி சுருண்டு கிடக்கிற மகளை பார்பது  காயத்திரிக்கு புதிதில்லையே. 

அவள் மறுத்தாலும் விடாமல் கெஞ்சி கூத்தாடி  நீர்க்க ஆக்கிய கஞ்சியை, கரைத்த கூழை மகளுக்கு ஊட்டி, மாத்திரைகளை தந்து கூடவே இருந்து பார்த்துக்கொண்டாள். 

மூன்றாம் நாள் யசோதை கொஞ்சம் தெளிந்து எழுந்தாள். என்றாலும்  அறையை விட்டு நகரவில்லை. 

அம்மா மந்திரித்து கொண்டுவந்த கயிறை இவளுக்கு கையில் கட்டிவிட்டாள். நெற்றியில் விபூதியை பூசிவிட்டு “ஒன்றுமில்லை கண்ணு எல்லாம் சரியாயிடும்”  என்றாள். 

“அம்மா எனக்கு அந்த மாப்பிள்ளை வேணாம். கல்யாணமும் வேணாம் எனக்கு எதுமே பிடிக்கல வேண்டாம்மா” 

அன்றிலிருந்து இருபத்திரெண்டாம்  நாளில் நிச்சயதார்த்தம் வைத்துக்கொள்ளலாம் என்று முடிவாகியிருந்தது. 

காயத்திரி வேகமாக போய் கதவை சாத்தி தாளிட்டுவிட்டு மகளிடம் வந்தாள். 

“பாப்பா எல்லாம் நல்லபடி கூடி வந்திருக்கும் போது இப்படி பேசாதே, அப்பாவோட கோவம் தெரியுமில்ல. தொலைச்சுகட்டிடுவார். உன் அண்ணனும்தான். 

வேணாம் பாப்பா. அம்மாதான் அன்னைகே சொன்னேன்ல எந்த பிக்கல் பிடுங்கல்களும் இல்லாத நல்ல குடும்பம். 

தனியா எதோ கண்காணாத ஊர்ல தனிக்குடித்தனம் வேற. நிம்மதியா சந்தோசமா இரு கண்ணு.எதையும் போட்டு குழப்பிக்காதே ” என்றாள்.

” அம்மா எப்படி சொல்றதும்மா. எனக்கு பிடிக்கல. ரொம்ப பயமா இருக்கும்மா, ரொம்ப அருவெறுப்பா இருக்கு.  அன்னைக்கு தனியா பேசவந்திட்டு அவன் என்னை தொட்டு … முத்தம் ” அதற்குமேல் விவரித்து யசோதைக்கு சொல்லமுடியவில்லை. இந்த வீட்டில் இவள் தாயிடம் தவிர வேறு யாரிடம் மனதிலிருப்பதை சொல்லுவாள்! ஆனால் அவளால் தாயிடம் கூட வெளிப்படையாக  சொல்லமுடியவில்லையே. 

மகளின் பயம் எதைக்குறித்தென காயத்திரிக்கு புரிந்தது. 

அருகே அமர்ந்து பரிவுடன் கையில் தட்டிக்கொடுத்தாள்.

“பாரு கண்ணு, கல்யாண வாழ்க்கைன்னா இதெல்லாம் நடக்கும். இல்லாமல் நான் உங்க மூனு பேரையும் எப்படி பெற்றெடுத்திருப்பேன் சொல்லு. 

ஆரம்பத்தில் புரியாததனால் கொஞ்சம் பயமாதான் இருக்கும்.பிடிக்காமத்தான் இருக்கும்  கண்ணு போகப்போக பழகிடும். உனக்கு எப்படி சொல்றதுன்னு அம்மாக்கு தெரியல. நான் கீழ போய் உன் சின்ன அத்தையை அனுப்பி உன்கிட்ட வந்து பேச சொல்லவா” 

யசோதைக்கு தலைதலையாய் அடித்துக்கொள்லாம் போல் இருந்தது.

அதில்லம்மா நான் சொல்லவந்தது வேற. எனக்கு பிடிக்கல இஷ்டமில்லைன்னு சொன்னபிறகும் அவன் என்னை தொட்டது கொஞ்சம் கூட பிடிக்கல. அதெல்லாம்.. ” 

எதையுமே உடைத்து பேசி பழகிடாத யசோதைக்கு

அவன் எப்படி முரட்டுதனமாக  நடந்து அவளை பயம்கொள்ளச்செய்தான், எப்படியான  அத்துமீறலை அவள் மீது  செய்தான், என்னமாதிரியான வன்முறையை கையாண்டான், அவள் என்ன மாதிரியான வலி வேதனை அருவருப்பை சகித்தாள், அவளின் துன்பம் வேதனை வெறுப்பின் உச்சம், இனி அவனைப்பார்த்தாலே குமட்டுமென்கிறதையெல்லாம், 

சில நிமிடங்கள் அவனை சகிப்பதே நரக வேதைனையாக இருந்தது. காலம் முழுக்க வாழ்வினை பகிர்ந்து அவனை சகிப்பது என்பது யசோதையால் எப்படி முடியும்! என்பதையெல்லாம் எப்படிச்  சொல்லி புரியவைப்பாள். 

அப்படியே சொல்லி அம்மாவிற்கு புரிந்தாலும் தான் அம்மாவால் எதை மாற்றிவிட முடியும்!!இந்த வீட்டில். அம்மாவுக்கு அன்றாட சமையலின் மெனுவை கூட சுயமாக முடிவெடுக்கிற உரிமையை இந்த வீடு கொடுத்ததில்லை.இப்படி  மகள் மனதில் ஓடியது. 

மகளுக்கு பிடிக்காத ஏதோ நடந்திருக்கிறதென்று கணித்து விட்டிருந்தாள் காயத்திரி. தாயறியாதது ஏது!! 

மகளுக்கு தான்.. யாரும் தொட்டால் பிடிக்காதென்பது காயத்திரிக்கு தெரியுமே. 

மூத்த மகள் இறப்பை பார்த்த அதிர்விலிருந்த, அப்போது வெறும் ஐந்தாறு வயதிலிருந்த சின்ன மகள் யார் பக்கத்தில் போனாலுமே

‘இந்த பேய்  என்னை தொட வருகிறது தள்ளிப்போ போ’என பயந்து அலறுவாள்.யாரையுமே தொட விட்டதில்லையே. தாயான தன்னையும் தான். அப்போதிருந்து இப்போதுவரை யாரையும் அறைக்குள் அண்டவிடாமல் தனியேதான் படுக்கிறாள். 

இந்த தீராத அச்சத்தை சின்ன பேத்தியின் மனதில் விதைத்து இந்த சிக்கலை உருவாக்கியவள் மாமியார். 

காயத்திரி சின்னவளை நினைத்து வேண்டாத தெய்வங்கள் இல்லை. 

வளர வளர எல்லாம் சரியாகிக்கொண்டுதான் இருந்தது.

மகள் கதை புத்தகங்களை எடுத்துவந்து படிக்கத்தொடங்கியபோது காயத்திரி பெரும் மன ஆறுதல் பெற்றாள். இதையெல்லாம் படித்தால் மகளின் மனது கொஞ்சம் நெகிழும். நல்லதற்குத்தான் என்று நினைத்திருந்தாள்.  

மகள் மணவாழ்க்கையில் நுழையும் போது என்னாகுமோ என்று முன்பிருந்த  அச்சம் கூட காயத்திரியை விட்டு நீங்கியிருந்தது. 

 ஆனால் இந்த இரண்டு நாள் சுரவேகத்தில் மகளின் அனத்தல்களும் நடுக்கமும் என்னைத்தொடாதே தள்ளிப்போ என்ற புலம்பல்களும். 

காயத்திரி தாங்காமல் குளியலறைக்கு போய் அழுதாள். அவளால் அதைதாண்டி என்ன செய்யமுடியும். மகளுக்காக மட்டும்தான்  உயிரை பிடித்துக்கொண்டு வாழ்வதே.. 

இப்பொழுதும் கடவுளிடம் தான் மன்றாடிக்கொண்டிருக்கிறாள். மகளின் திருமண வாழ்க்கையை 

தொடு உறவை.. பயம் வெறுப்பு இல்லாமல் ஏற்று பழகி எந்த சுணக்கமும் இல்லாமல் நல்லபடி வாழணும். 

கல்யாண வாழ்கையில் நுழைகிற பெண்ணுக்கு இதுவும் நடக்கும். அது உலக இயல்பு தான். மெல்ல மெல்ல அதை ஏற்றுப்பழகிக்கொள்ளவேணும்  என்பதை மட்டும் மகளுக்கு சொல்லி புரியவைத்துவிட முடிந்தால் நன்றாக இருக்கும். 

இப்படி தாய் மனதில் ஓடியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here