நெடுநல் அத்தியாயம் -33

0
323

கயாதிகுட்டியின் மூன்றாவது பிறந்தநாளுக்கு அவளுக்கு ஏகப்பட்ட மொம்மைகளும் விளையாட்டுப்பொருட்களுமாக்ய் அன்பளிப்புகள்  குவிந்துவிட்டிருந்தன. 

*முதல்ல ரூம்ஃபுல்லா  இரைச்சு வச்சிருக்க இந்த விளையாட்டுப்பொருட்களை எடுத்து பின்க் கூடையில போட்டு  வச்சிட்டு வந்தா தான் பப்பிள் கன்  விளையாட தருவேன் இல்லைன்னா நோ”

எடுத்துத்தரச்சொல்லி அடம் செய்து அழுது கொண்டிருந்த மகளை கல் நெஞ்சத்தோடு அழட்டுமென்று விட்டுவிட்டாள் யசோதை.

அதிகம் அழுதால் தாங்காது அம்மா வந்து அணைத்து தூக்கி கேட்டதை எடுத்து தந்துவிடுவாள் என்பதற்குப்பழகி அழுது கொண்டே இருந்தாள் கயாதிகுட்டி. 

அதிகம் அழுதால் வீசிங் ப்ராப்ளம் வந்து மகள் கஷ்டப்படுவது தாங்காமல்  இலகி யசோதை அவளை அழவிடாமல் கேட்டதைக் கொடுத்துக் கொண்டிருந்தது குட்டிப்பெண்ணுக்கு அழுதே சாதிக்கலாமென்பதை கற்றுக்கொடுத்துவிட்டதுபோல. 

வேறு வழியில்லை. இந்த குணத்தை மாற்றியே தீரவேண்டுமென்று பிடிவாதமாய் மகள் அழுகையில் மனம் தவித்தபோதும் அசையாமல் அமர்ந்திருந்தாள் யசோதை. 

நின்றபாடில்லாமல் அழுகை கேவலாக மாறி மூச்சிறைக்க விக்கி விக்கி அவள் அழுதுகொண்டிருப்பதில்  எங்கே மனம் தளர்ந்து மகள் கேட்கிற டாயை எடுத்துக்கொடுத்துவிடுவோமோ என்று அஞ்சிய வேளையில் அழுகையோடே எழுந்து போய் ஒவ்வொன்றாக பொறுக்கி கூடையில் போடத்தொடங்கினாள் மகள். 

பிடிவாத குணம் இருக்கவேண்டியதுதான். 

ஆனால் அதை ‘என்  நிலைபாட்டில் நான் உறுதியாக நிற்கிறேனென்று காட்டுவதற்காக’ மட்டுமே பயன்படுத்தவேண்டிய ஒன்று. அடுத்தவரை தன் பிடிவாதகுணத்தால் வீழ்த்தி சாதிப்பதற்காக இருக்கக்கூடாது. 

யசோதையும் வித்யாதரனிடம் பிடிவாதம் பிடித்தாள் தான். 

நாம்  இன்னொரு குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டுமென்று யசோதை கேட்டதை அவன் ஒத்துக்கொண்டானில்லை. 

“இந்த ஒரு குட்டியே  மொத்த எனர்ஜியும் வடியவிட்டு உன்னை உண்டு இல்லைன்னு  ஆக்கிட்டு இருக்கா. இதில் அடுத்தது வேற வேணும்ங்கிற.”

“அதுக்காகத்தான் வித்யா, முழு அட்டென்ஷனும் நமக்கே கிடைக்குது, நமக்கு மட்டுமே வேணும்ன்னு நினைக்கிறா குட்டி.

இந்த குணத்தை வளரவிட்றது நமக்கும் நல்லதில்லை, அவளுக்கும் நல்லதில்லை.  இன்னொன்னு வந்துட்டா தன்னைப்போல அந்த பாப்பாக்கும் எல்லாத்திலும் பங்கு உண்டு. ஷேர் பண்ணி வளரணும்ங்கிற  எண்ணம் பழக்கம் வந்திடும்ல”  

கயாதி குட்டி தன் அம்மாவை விட்டு உறக்கத்தில் கூட விலகுவதில்லை. எப்படியோ கண்டுகொண்டு கூடவே எழுந்துவந்து தூக்கச் சொல்லி அடம் செய்குவாள்.  அத்தோடு யசோதையை யாரும் நெருங்கி தொட விடுவதில்லை. வித்யாதரனே மகள் அறியாத நேரம் தான் மனைவியின் கையைக்கூட தொடமுடியும் அந்தளவு அடமும் பிடிவாதமுமாக அம்மாவை மொத்தமாக சொந்தம்  கொண்டாடுகிறாள். 

யசோதைக்கு கயாதி குட்டியை அவள் பிறந்த முதல் நான்கரை மாதகாலத்திற்கு தெரியக்கூட செய்யாது.அப்போது  முழு நேரமும் வித்யாதரன் தான் தோளில் போட்டு வளர்த்திருக்கிறான். ஆனால் இவளோ அப்பாவை வேண்டாம் ‘நீ போ’ என்பாள். அம்மா தான் சகலத்திற்கும். 

மகளுடைய இந்த தன்மையினால் யசோதைக்கு தனிபட்ட நேரமென்ற ஒன்றே இல்லாமல் முழு நேரமும் மகளுக்கே, அவளுக்கானதை செய்து கொடுப்பதிலேயே போகிறது. 

இன்னொரு குட்டி வந்துவிட்டால் இவளுக்கு சேர்ந்து விளையாட துணை கிடைக்கும் அம்மாவை அதிகம் தேடமாட்டாள் தானே..

தவழும் வயதிலிருந்தே கயாதி ஒரு கெட்ட பழக்கத்தை கைவிட்டு மறந்தாள் எனில் மற்றொரு கெட்ட பழக்கத்தை பிடித்துக்கொள்கிறாள். 

தவழும் போது கைகளை கீழே ஊனுகிற குழந்தை இரு கைகளையும் மாற்றி மாற்றி கைசப்புதல் பழக்கத்தை கொண்டிருக்க அதனால் இன்பெக்ஷன் வந்தது. 

அதற்காக நல்ல சுத்தமான தரையை போகிற இடத்திலெல்லாம் எதிர்பார்க்கவா முடியும். மகளையும் தூக்கி சுமந்துகொண்டு  வேலையும் கையுமாக திரிபவள் யசோதை.. 

ஒருவழியாக அதை மறந்தாளே அப்பாடி என ஆறுதல் கொள்வதற்குள் கண்டதை எடுத்து வாயில் போடுகிற பழக்கத்தை கைபிடித்திருந்தாள். எறும்பு கரப்பான்கள் கூட அதிலடக்கம். 

ஒவ்வொருதரமும்  சீக்குற்று அவதியுறும் மகளை ஹாஸ்பிடல் தூக்கி ஓடும்போதெல்லாம் யசோதைக்கு மனம் வலிக்கும். 

“விடு யசோ சரியாயிடும். ரொம்பவும் கைக்குள்ள பொத்தி வளர்த்தா சரிவராது. ரோட்டோர குழந்தைகள பார். கண்டதை சாப்ட்டு கண்டபடி வளருது. அதுக்கு தகுந்த மாதிரி நோயெதிர்ப்பு சக்தி தானா கிடைச்சிடும்” என்பான் வித்யாதரன். 

கேட்டது நடக்காவிட்டால் சுவரில், தரையில் தலையை நங் நங்கென்று மோதி நெற்றி வீங்கிப் புடைக்க அழுது கதறிக்கொண்டிருப்பாள் கயாதி. வீசிங் கண்டு நெப்ளைசர் மருந்து மாத்திரைகளென்று அதற்கும் யசோதை தான் தூக்கிக்கொண்டு ஓடவேண்டும். வித்யாதரனிடம் தான் மகள் ஒட்டுவதில்லையே.

யசோதை தனித்தவளாய் இருந்தபோது  எந்த அளவிற்கு ஹாஸ்பிடல் என்றால் அலர்ஜியாகி பிடிக்காமல் தவிரத்தாளோ இப்போது மகளுக்காக இம்மெனுமுன் அங்கேதான் ஓட வேண்டியிருக்கிறது. பிடிக்காத போதும். 

எங்கே போனாலும் பத்தடி கூட நடக்க மாட்டேனென்று தூக்கச் சொல்லி அடம்பிடிப்பாளா.. 

யசோதை மகளிடம் 

“பார் குட்டி அம்மா பாவம் உன்னை தூக்கி தூக்கி கை இப்படி வலிக்குது. கொஞ்ச தூரம் நடப்பியாம் அப்புறம் அம்மா தூக்கிப்பேனாம் சரியா” என்றால் சரி என்று தலையாட்டி நடக்கவும் செய்வாள் மகள். 

ஆனால் கொஞ்ச தூரம் தான் நடையெல்லாம். திரும்ப தூக்கு என்று நிற்பாள். சரிதானென்று தூக்கப்பார்த்தால் இங்கிருந்தில்லை. எங்கே என்னை இறக்கிவிட்டாயோ அங்கிருந்து தூக்கு என அதே இடத்திற்கு ஓடிப்போயாவதும் நின்று அடம் செய்குவாள். இப்படிப்பட்ட  சோதிப்புகளை யாரேனும் பிள்ளை வளர்ப்பில் கண்டிருப்பார்களா இல்லை தனக்கு மட்டும்தானா! என்று நொந்துகொள்வாள் யசோதை. 

அதுதான் கயாதி குட்டியின் இந்த அடம் பிடிவாத குணக் கோட்டை அழிக்கமுடிந்திறாதபோது வேறுவழியில்லை. 

அந்த கோட்டிற்கு பக்கத்தில் மற்றுமொரு கோட்டைப்போடுகிற டெக்னிக் தான் அடுத்த பிள்ளைவேண்டுமென்கிற தன் நிலைபாட்டின் உறுதியை எடுத்துச்சொல்லி வித்யாதரனுக்கு புரியவைத்தாள். 

“மொத்தத்தில் இந்த குட்டி ஒழுங்கு கற்று சரியா வளரத்தான் என்னை சப்ஸ்டீயூட் ப்ராடக்டா பெத்தீங்கீளான்னு  அடுத்த குட்டி பிறந்து வந்து உன்னை நிக்க வைச்சு கேள்வி கேட்கப்போகுது பார்.” 

என்று ஒற்றைவிரலால் விளையாட்டாக பத்திரம் காட்டினாலும் அந்த வார்த்தைகளுக்குள் அடுத்த குட்டியை பெற்றுக்கொள்ள சம்மதத்தையும்  சொல்லிவிட்டானே. யசோதைக்கு தன் பிடிவாதம் வென்ற மகிழ்ச்சி. 

இருப்பத்திநாலு மணி நேரங்களும் போதாத, ஓயாத அயர்ச்சியையும் சோர்வையும் மகள் கயாதி யசோதைக்கு தந்துகொண்டிருப்பதை பார்த்துக்கொண்டிருப்பவன். 

அடுத்தொரு குழந்தை பிறப்பையும் வளர்ப்பையும் தாங்க அவளுக்கு  சக்தியிருக்க வேண்டுமே என்கிற டென்ஷன் வித்யாதரனுக்கு.

கயாதி குட்டி அழுகை கேவலெல்லாம் மட்டுப்பட்டவளாக  பாதி கூடை நிறைக்க விளையாட்டு பொருட்களை நிரப்பிவிட்டு மீதிக்கு கைவலிக்கிறதென்ற பாவனையில் கையை அழுத்தியபடி பாவம் போல் முகத்தை வைத்து தன் மொட்டு பெரிய கண்களில் பரிதாபத்தை தேக்கி யசோதையை நோக்கினாள். 

அம்மாவை வீழ்த்த மூன்று வயதிற்குள் என்னவெல்லாம் கத்துவைத்திருக்கிறாள் இந்த குட்டி! யசோதைக்கு சிரிப்பு வந்தது.  

அருகே வா என்றழைத்து 

“என்ன ஆச்சாம் கயாதி குட்டிக்கு!?

எடுத்துவச்சு எடுத்துவச்சு கைவலிக்குதா! இரைச்சு வச்சா எடுத்தும் வைக்கணும் குட்டி. இப்போ கைவலிச்சா கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு அப்புறம் திரும்ப எடுத்துவைப்பியாம்”  

அப்ப அதுவரைக்கும் பப்பிள் கன் விளையாடுகிறேனென்று தடுக்கில் புகுந்த மகளுக்கு ”  நோ நோ முழுசா எடுத்துவச்சப்புறம் தான் பப்பிள் கன் கிடைக்கும்.” 

இந்த பாப்பா எப்போ வெளியே வருமென்று ஆர்வமாக யசோதையின் மேடிட்ட வயிறை தொட்டாள் மகள்

“இதோ சீக்கிரமே உன் கூட விளையாட வந்திடும்.”

மின்னல் ஒளி பளிச்சிட்ட கண்களுடன் ” அது வந்து மீதி டாய்ஸ எடுத்துவச்சிடும்ல” 

யசோதை சிரித்தாள். 

இத்துணூண்டு இருந்துக்கிட்டு வேலையிலிருந்து தப்பிக்க குறுக்கு வழி கண்டுபிடிக்கிறத பாரேன்!! 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here