அட இத்தனை நாளும் இதே சாலையில் தானே போகிறோம்.. இந்த மரத்தை கவனித்ததே இல்லையேங்கிற மாதிரி தான்..
எதையாவது ஒன்றை நாம எப்ப உற்று கவனிப்போம்!! அது நமக்கு தேவைப்படுகிற தருணத்தில் தான். அதுவரைநம் கண் எதிரே வந்தாலும் நம்மை உரசிக்கொண்டு கடந்துபோவதாயிருந்தாலும் கூட கண்டுகொண்டிருக்கிற மாட்டோம்..!
What You Are Looking For Is in the Libraryயின் மையப்பிடி இதிலிருந்துதான் தொடங்குகின்றது.. ஐந்து கதைகள். ஐவருக்கும் ஐந்து விதமான தேவைகள்.
ஒருவழியாக தொடங்கி ஒரு இடத்தை தொட்டுவிட்டேன் தான். ஆனால் இங்கேயே தேங்கிவிடாது அடுத்தபடிக்கு நகர என்ன செய்யட்டும்..!
வேலை பார்த்தால் உறுதியான வருமானம் இருக்கும் ஆனால் பிஸ்னஸ் செய்வது தான் என் சொந்த விருப்பம். இதுவா! அதுவா! அல்லது இரண்டுமேவா?
கெரியர் குடும்பப்பொறுப்புகள் குழந்தை வளர்ப்பு எல்லாவற்றையும் ஒருங்கே பேலன்ஸ் செய்யவது சாத்தியமா! எனில் செய்ய வேண்டியதென்ன..?
எந்த வேலையை நான் செய்ய! எது எனக்கு உகந்தது அல்லது எதைச்செய்ய நான் தகுதியானவன்..!?
வேலை வேலையென்று அதைமட்டுமே வலைப்பின்னலாக கட்டி ஓய்ந்தாயிற்று.. பணி ஓய்வுக்கு பிறகு திரும்பிப்பார்த்தால் நான் தொடங்கின இடத்திலேயே தான் நிற்கிறேன். வேலைபார்த்ததைத்தவிர வேறொன்றும் அறியாதவனாக.. வேலை பார்ப்பது மட்டுமே வாழ்வு இல்லையென்பதை ஓய்வு காலத்தில் உணர்ந்த பிறகு.. !?
ஐந்து வெவ்வேறு தேவை மனிதர்களுக்கும் ஒரு நூலகத்திற்கும் அந்த நூலகத்தின் நூலகர் கோமாட்ச்சிக்கும் இடையேயான நூல்பின்னலுடன் கதை சொல்லல் நேர்த்தியுடனான Japanese Novel – What You Are Looking For Is in the Library( 2023) by Michiko Aoyama. Translated in English by Alison watts.
சொல்லவந்ததை கதையோட்டத்துடன் பாத்திரங்களுக்கிடையே விரவி நுட்பமாக சொல்லிவிடுகிற Michiko Aoyamaவின் எழுத்துநடை பிடித்திருக்கிறது.
ஒவ்வொருவருக்கும் நூலகர் கோமாட்சி தன் கைபட வடிவமைத்து அன்பளிப்பு ஒன்றையும் சேர்த்துக்கொடுப்பதும் குறிப்பாக எனக்கு பிடித்தது.
The gift from komatchi is the motivation to choose for ourselves what we want. Gift can be anything. But we will find our own in it.
☆Bhuvanam’s Book review
☆13.march.2024