கமல் படங்களில் கலை படிமங்கள்

0
882
Devaraalan Attam
நெய்யிலிட்டு வறுத்த முந்திரிகளை ஒரு தட்டு நிறைய எடுத்து வைத்து உண்பதின் ருசியைக்காட்டிலும் சர்க்கரை பொங்கலில் ஆங்காங்கே ஒளிந்து கிடக்கும் முந்திரிகளை கரண்டியால் தேடித்துழாவி எடுத்து உண்பதன் ருசி அதிகமே தான். 
நம் பாட்டன் காலத்திலெல்லாம் பெரும் அரசியல் மாற்றங்கள், தூண்டல்கள், எழுச்சிகள் கூட நாடகத்தின் மூலம் பார்பவர்களுக்கு கடத்திக்கொண்டிருந்தார்கள்.
நம்மின் இந்த காலத்திற்கு அது செட் ஆகாது. 
அதுவும் திரைப்படத்திற்குள். 
ஒரு முழு நாடகத்தன்மை யாருக்கும் ருசிப்பதில்லை. உட்பொருள் கருவினை புரிந்துகொள்ள மெனக்கெடுகிற பொறுமையெல்லாம் படம் பார்பவர்களுக்கு நிச்சயம் இருக்காது.

 நல்ல ஆழமான சப்ஜெக்டை சொல்ல நினைத்திட்ட..
நட்சத்திரம் நகர ப.ரஞ்சித் இதில் கொஞ்சம் கவனம் வைத்திருக்கலாம்.
 எனக்கு அதிகமும் கமல்ஹாசன் படங்கள் ஏன் பிடிக்குமென்றால் படைப்பை ப்ரெசென்ட் பண்ற விதம். 
சர்க்கரைப்பொங்கலில் தேடி எடுக்கிற முந்திரிகளாட்டம் கமர்சியல் படங்களில் கூட அதன் நடை மாறாமல் ஜஸ்ட் லைக் தட். போகிற போக்கில் Folk/Theatrical Art கொஞ்சம் சேர்த்து பார்பவரின் ரசனை மாறாமல் கூடவே சொல்லவருவதை அதிலேற்றி சொல்கிற கலை வித்தகத்தை கமலஹாசனின் பல படங்களில் பாடல் வடிவில் காணலாம்.

 Performing / Folk / Theatrical art முந்திரிகள் சில
1. சலங்கை ஒலியில் பரதம்
2. தேவர்மகனில் சிலம்பாட்டம்
3. விருமாண்டியின் ஜல்லிக்கட்டுஅதே படத்தில் வரும் ஒப்பாரிப்பாடல், கரகாட்டம், சாமியாட்ட நையாண்டி மேளம்.
 4. தசாவதாரத்தில் வரும் பொம்மலாட்டம்
5. அன்பே சிவத்தில் தெருக்கூத்து ஆட்டம்
6. அபூர்வ சகோதரர்களில் புலியாட்டம். அதே படத்தில் வரும் Bafoon dance.
 7. விஷ்வரூபத்தில் உன்னைக்காணாத நானின் கதக் நடனம்.
 8. பம்மல் கே சம்பந்தத்தில் வரும் ஒப்பாரிப்பாடல். 
9. ஆளவந்தானின் கடவுள் பாதி மிருகம் பாதியில் introspective art.அதே படத்தில் வரும் புலியாட்டம் பாடல். 
10. உத்தமவில்லன் படத்தின் இரணியன் நாடகம், தெய்யம் நடனம், வில்லுப்பாட்டு, ஆட்டக்களரியென எல்லாம் சேர்ந்து கலந்து கட்டிய கலக்கல் படம். 

அந்த ஸ்டைலில் மணியின் PS1ல் இரண்டு பாடல்கள். பொன்னியின் செல்வன் புதினத்தில் வரும் கடம்பூர் மாளிகையில் நடக்கும் தேவராளன் ஆட்டம்,பழையாறையில் கம்ச நடனம் இரண்டுமே எதிர்பார்த்தபடியே பிரமாதமாக காட்சிவடிவில் படத்திலும் இருக்கு.
ரொம்பவே பிடித்திருந்தது. போலவே கல்கியின் எழுத்தில் முதல் பாக, கடைசி அத்தியாயத்தில், காஞ்சியில் நடப்பதாக வரும் அரவான் நாடகத்தையும் ஒரு பாடல் வடிவில் சேர்த்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். எதிர்பார்த்திருந்தேன். காணோம்.

 பள்ளி நாட்களில், விடுமுறைக்கு கோவையில் தாத்தன் ஊருக்கு போயிருக்கும் பொழுது அங்குள்ள தர்மராஜா கோவிலில் அரவான் பண்டிகை/ கூத்தாண்டவர் நோன்பியென.. நோன்பி சாட்டினதிலிருந்து பத்து நாட்களுக்கும் மேலாக தினமும் கூத்தும் கொண்டாட்டமுமாய் அரவான் பண்டிகையிருக்கும். இரவில் நடக்கும் ஆக்ரோசமான அந்த கூத்து ஆட்டத்தை திகில் கலந்த ஆர்வத்தோடு பார்த்தெல்லாம் இன்னமும் நினைவிருக்கு. இப்போதும் நடக்கிறதாவென தெரியவில்லை. திரும்ப வாய்ப்பு கிடைத்தால் பார்கவேணும்.

        

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here