Veronica Anne Roth எனும் பெண் எழுத்தாளரின் Dystopian fiction நாவலின் திரைவடிவமே Divergent.
*இதோ இந்த உலகம் உன்னையே உற்று நோக்குக்கிறது. அதற்கு தகுந்தாற்போல் உன்னை நீ காட்டிக்கொண்டால் மட்டுமே நீ எஞ்சுவாய்.
*வாழ்கையை சீர்மையாக சமாளித்துப்போக தகுதிகளை வளர்த்துக்கொள். இல்லையெனில் கீழ்மையிலும் கீழ்மைக்கு தள்ளப்படுவாய்.
*எந்த பிரிவிலும் அடங்காமல் எதனோடும் பொருந்திப்போகாமல்
தனித்தகுதிகளோடு வாழ உன்னை உலகம் அனுமதிப்பதில்லை..
இப்படிக்குப்படியான கட்டுறுத்தல்களோடு,
பலதரப்பட்ட குணாதியங்கள் ஒன்றோடொன்று முட்டி மோதி முரண்படுவதை நேர்த்தியாக காட்டுகிறது படம்.
ஒரு ஃபிக்ஷன் திரைப்படத்தில் ஏகப்பட்ட குறியீடுகளை காண்பதுவும்,
அதைப்பற்றி ஆராய எதையெதையோ தேடிப்படிப்பதும் என்ன டிசைனோ !!
அப்படியாக படித்துப்பார்த்ததில்
இந்தியத் தத்துவ இயலில்..
சத்துவ குணம், இராட்சத குணம், தாமச குணம் எனும் முக்குணங்கள் சேர்ந்த மூன்று தத்துவங்களால் ஆனது உலகென சொல்லப்படுகிறது.இன்னும் எதெதோ எழுதப்படிருக்கு. ங்கே ரொம்பவும் உள்ளிறங்கி ஆராய்ச்சி செய்தால் அவ்வளவு தான்.
ஆகக்கூடி இந்த மூன்று குணங்களையும் ஒருங்கே பெற்ற ஒரு பெண்ணை சுற்றிதான் முழுக்கதையும்.
அழகான காதல், தோழமை, தாய்மை, துணிச்சல், வீரம், விவேகம், பயம், போட்டி, பொறாமை, உதவுதல், ஏமாற்றுதல், அடக்குமுறை,எதிர்த்தல் இப்படி எல்லாவற்றையும் காட்சிக்கு ஒன்று வீதம் படம் காட்டுகிறது. காட்சிபடமா பார்க்க எனக்கு பிடித்திருந்தது.
நாவல் இனிதான் வாசிக்கனும்.