நடிகையர்திலகம் MOVIE REVIEW

0
444
#நடிகையர்திலகம்

திரைப்படமாக்கப்பட்ட சுயசரிதையை பார்பதில் என்ன சுவாரசியம் இருந்துவிடப்போகிறது எனும் முன்கணிப்பை பொய்யாக்கும் விதத்தில் திரையோட்டம் அவ்வளவு நேர்த்தி. இருவேறு காலகட்ட காட்சிகள் மாற்றி மாற்றி காட்டப்படுவதும் அறுபதுகளின் காதலில் நிறம்கூட்டி எண்பதுகளின் காதலை லேசா டல்லா காட்டியிருப்பதும் ஸ்பெசலா கவனிக்க வைக்கிறது.

நம்மூர் சினிமாவில் நடிகையின் கதைங்கிற பேரில் ஏகப்பட்ட திரைப்படங்கள் முன்னமே கண்டிருப்போம். அதெப்படியோ திரைத்துறையில் நுழைந்தாலே தாங்குசக்தி, திடம் குறைந்த சென்ஸிட்டிவ் ஆட்களா மாறிவிடுவார்களோ அல்லது தோற்று துவண்டு போகிறவர்கள் எண்ணிக்கைதான் அதிகமோ தெரியாது.
ஆண், பெண் வித்தியாசமெல்லாம் இல்லாமல்
சினிமா உலகமென்பது ஒருவரை வெளிச்சதிலும் இருளிளும் ஒருங்கே அமிழ்த்துவதே என்பது தெரிந்த விஷயம் தான்.

நாங்கள் நண்பர்கள் சிலர் நடிகர் பார்தீபனின் பண்ணை வீட்டை பார்வையிட சென்றிருந்த பொழுது அரை மணி நேரத்துக்கும் மேலாக அவரோடு பேசிக்கொண்டிருந்தோம்.
திரைத்துறையைப்பற்றிய பொதுவான நிறைய விசயங்களை பேசினார்.

தோற்றுப்போதல் கொடுக்கிற அதே அளவு ப்ரஷரை வெற்றிபெற்றாலும் அனுபவிக்க வேண்டியிருக்கும். என்னடா இதே அளவு வெற்றியை அடுத்த படத்திலும் தந்தாகனுமே, இந்த இடத்தை தக்கவைத்தாகனுமேங்கிற டென்ஷனை எல்லாம் சொல்லிப்புரிய வைக்க முடியாதென்றார்.
நடிகர் பார்த்திபன் அவரின் பண்ணை வீட்டை வித்தியாசமான ரசனையோடு வடிவமைத்திருக்கிறார்.

பறவைகளை வீட்டில் வளர்க்கிறவர்கள் பூட்டிய கூண்டிலிட்டுத்தானே வைத்திருப்பார்கள். ஆனால் நாங்கள் பார்த்தது அந்த தோட்டத்தில் ஒரு பெரிய மரத்தில் பறவைகள். மரத்தை சுற்றி பெரிய வலை.
அந்த மனிதர் அதற்கும் ஒரு விளக்கம் வைத்திருந்தார்.
அந்த பறவைகள் அந்த மரத்தில் கூடுகட்டி குடும்பத்தை கொண்டாடும், சுதந்திரமாய் அந்த வெளிக்குள் பறந்து கொண்டிருக்கும்.. அதே சமயம் அந்த வலைவட்டத்தை தாண்டிவிடவும் முடியாது. கல்யாண கட்டமைப்பில் மாட்டிக்கொள்கிறவர்களும் இப்படிதான்.
கொஞ்சநாளில் இந்த வலையையும் எடுத்துவிட்டாலும் இந்த மரத்திற்கு பழகின பறவைகள் அதை தாண்டாது. இதுதான் நமக்கு பிடிச்ச இடம்ங்கிற மைண்ட்செட்க்கு வந்திடும் நம்மை மாதிரியே என்றார்.

காதலை கல்யாணத்தில் கட்டிப்போடுகிறோம். அந்த பிணைப்பை இறுக்கி பிடித்துவைத்து ஒருத்தரை ஒருத்தர் தக்கவைத்துக்கொள்கிற போரட்டத்திலும், நான் இன்னமும் எப்பவும் உன்னை காதலிச்சிட்டுத்தான் இருக்கேன்னு இணையை நம்ப வைப்பதிலும் பொய்யா நடித்து நடித்து கடைசியில் அந்த பொய்க்கே பழகிவிடுகிறோமே அப்படித்தான் என்றார்.

புகழ், பணம், பெயர்,வெற்றி, வீழ்ச்சி, காதல், திருமணம், குடும்பவாழ்வும் பொதுவெளியும், நீ பெரிதா நான் பெரிதா ஈகோ, பொஸஸிவ்நெஸ் எல்லாம் கலந்துகட்டி
நடிகயர் திலகம் திரைப்படத்தை பார்க்கும் போது அவர் சொன்னதுதான் நினைவில் ஓடியது.

அதீத அன்பின் வெளிப்பாடே என்னுடையது எனக்கானதெனும் பொஸஸிவ்நெஸ் எனில் அதுவே தான் அந்த அன்பின் பிணைப்பில் விரிசல் விழவும் காரணமாகும்ன்னு என்னைப்போல சென்ஸிட்டிவானவர்களுக்கு எளிதில் புரியும்.
பொதுவா பிடிக்காதவர்களிடம் இருந்துதானே எல்லோரும் ஒதுங்கியிருப்பாங்க. நானெல்லாம் அதிகம் பிரியம் வைத்திருக்கிற, பிடித்தவர்களிடமிருந்து எட்டியே இருப்பேன். இழக்கிற, பிரிந்துவிடுகிற சூழலையெல்லாம் எதிர்நோக்கவேண்டியிறதபடி.

படம் எனக்கு பிடித்திருந்தது. கீர்த்தியும் அவரின் உடையலங்காரமும் பிரமாதம். சாவித்திரியின் தனிப்பட்ட குணாதிசயங்களா காட்டப்பட்டிருப்பவை மனதிற்கு நெருக்கமானவைகளா இருந்ததால் படம் பார்த்தபிறகு கூகுளிட்டு நிறைய விசயங்கள் படித்துப்பார்த்தேன். முன்பே பார்த்திருக்கேனா நினைவில்லை. இப்போ மாயாபஜார் படம் பார்த்தேன். செம்ம.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here