ஐம்பது வருடங்களுக்கு முந்தைய காலகட்டத்தின் கதை
இராணுவ வீரன் ஒருவனின் கதை.
போர்ச்சூழல் அவனை Post-traumatic stress disorder பாதிப்புக்குள்ளானவனாக்குகிறது.
உடல் தனியே தலை தனியே சிதறிய மனித உயிர்கள் உதிர்ந்து ஓடும் குருதியாற்று வெள்ளப்பெருக்கையே எந்நேரமும் கனவு கண்டு இறுகிக்கிடக்கும் அவனுக்கு
அதற்காக வைத்தியம் பார்த்துக்கொள்வதையோ பலகீனப்பட்டிருப்பதையோ வெளியே காட்டிக்கொள்ளவும் முடியாத,
கம்பீரமான ஆண்மகன் இவன் எனும் போர்வைக்குள் போர்த்தி வைக்கவேண்டிய நிர்பந்தம்
வேலையில் ப்ரஷர்
சோசியல் ப்ரஷர்
குடும்பத்தலைவனாக, ஒரு குழந்தைக்கு தகப்பனாகிக்காட்டவேண்டிய ப்ரெஷர்
சுழலுக்குள் சிக்கிக்கொண்டவனை
பற்றிப்பிடித்து மேலெழச்செய்து மூச்செடுக்கச்செய்கிறது ஒருத்தியின் மீதான காதல்
அவள் மீதான காதல் அவனுக்கு மருந்தாகிறது.
இறுகிக்கிடந்த அவன் மெல்ல தளர்கிறான்.
அவள் தொலைத்த முத்தை தேடித்தருகிறான்.
அவளுக்காக பூக்களை அடுக்கித்தருகிறான்
அவளொருத்திக்காகவே நடனம் பயில்கிறான்.
இசையில் கரைகிறான்
மழையோடு கடலோடு விளையாடி அவளோடு கலவிக்களிப்பெய்தியென
அவளால் தன்னை மீட்டெடுக்கிறான்.
போர்க்கனவு மாறி பூங்கனவென ஆகிறது.
இவ்வளவும் இருவருக்குமான இரகசியம். ஒருத்தியுடைய கணவன் இவன்
அவளோ மற்றொருவனின் மனைவி..
ஒழுக்க நியதிக்கு உட்படாத இரகசியக்காதல் இவர்களுடையது..
உண்டாவதைப்போன்றே
உடைதலையும் கொண்டதே கண்ணாடி இரகசியங்கள்.
உடைந்தபின் என்னாகிறதென்பது மீதி..
2014ல் வந்த Obsessed இன்றைக்கு நான் பார்த்த கொரியன் படம்.
டிஸ்கி – இது 18+ எரோட்டிக் ரொமான்ஸ் படம்