அவளைப்பீடித்து ஆட்டிய அச்சங்களை வெல்ல யசோதை சுயமாக எடுத்துக்கொண்ட முயற்சிகள் அத்தனையையும் ஒரு ரெக்கார்ட் நோட்டாக போட்டு எழுதி வைத்திருந்தது மொத்தமும் படித்துப் பார்த்திருந்தார் டாக்டர் மாதங்கி.
“முதலில் உங்களை பாராட்டியே ஆகணும் யசோதா. எவ்வளவு நேர்த்தியா ஒவ்வொன்னையும் எழுதியெழுதி வைச்சிருக்கீங்க. உங்க கேஸ் ஹிஸ்ட்ரிய புரிஞ்சிக்கிறது சுலபமா இருக்கு.”
“நாம ஏதாவது ஒரு டாக்டரைப்போய் பார்ப்போம் வித்யா.” என்று தொடக்கப்புள்ளி வைத்தவள் யசோதை.
பெரும்பான்மையானவர்களின் பொது மூடக்கருத்து மனநல ஆலோசகரிடம் போகிறவர்கள் மெண்டல் கேஸாகத்தான் இருப்பார்களென்பது.
இல்லாமலும் போகலாமே! தேவையில்லாத குழப்பங்களை நிவர்த்தித்துக்கொள்ள அதற்கென்றே படித்த, அனுபவமிக்க மருத்துவர்களிடம் ஆலோசனை பெறுவது ஆரோக்கியமான விஷயம் தான்.
வித்யாதரனின் தொழில்வட்டத்தில் தெரிந்த நண்பர் ஒருவரின் பரிந்துரைப்பில் இருவரும் டாக்டர் மாதங்கியிடம் கவுன்சிலிங் வந்திருந்தார்கள்.
மெடிக்கல் டெர்ம்ஸ்படி யசோதைதனக்கிருந்த
- பாஸ்மோஃபோபியா – பேய் பிசாசுகளின் மீதான பயம்.
- ஹாபிஃபோபியா – தொடுகையின் மீதான பயம்.
- மைசோஃபோபியா – அழுக்கு, அசுத்தத்தின் மீதான கிறுமித்தொற்று பயம்
- ஈனோகுளோஃபோபியா – மக்கள் கூட்டத்தின் மீதான பயம்.
- அகோரஃபோபியா – பொது இடங்களுக்கு போவது, பொது வெளியினை பயன்படுத்துவதன் அச்சம்.
- அப்செசிவ் கம்பல்சிவ் டிஸாடர் எனப்படும் ஓசிடி
- போஸ்ட் ட்ரமாட்டிக் ஸ்ட்ரெஸ் டிசார்டர்
அனைத்தையும் எதிர்த்து உடைத்து வெளியேறி வந்திருக்கிறாள்.
நிச்சயம் சாதாரண விஷயமில்லை. அதீத மன உறுதியினால் மட்டுமே சாதித்தவை.
கணவன் மனைவி இருவரிடமும் சேர்த்து வைத்து ஒருதரமும், வித்யாதரனிடம் தனியாக ஒருதரமும் பேசிப்பார்த்த பின்பு இப்பொழுது யசோதையை மட்டும் தனியே அழைத்து பேசிக்கொண்டிருக்கிறார் டாக்டர்.
“நான் சில கேள்விகளை கேட்பேன் யசோதா எந்த தயக்கமும் இல்லாமல் உங்களுக்கு நீங்களே தெளிவா யோசிச்சு உண்மையான பதிலை மட்டும் சொல்லுங்க. உங்கள் பதில்களில் இருந்து பிரச்சனையின் முடிச்சை கண்டுபிடித்து ஈஸியா அவிழ்த்துவிடலாம் சரிதானா!”
- “சரி டாக்டர்”
” செக்ஸ் ஏன் வச்சுக்கிறாங்கன்னு தெரியுமா!”
பதில் சொல்ல யசோதை திணறிப்போனாள்.. இந்தமாதிரி விசயங்கலெல்லாம் திறந்து வெளிப்படையாக பேசிவிடுகிற சூழலில் அவள் வளர்ந்திருக்கவில்லையே!
“உங்கள் கணவரோடு கூட பேசியதில்லையா!”இல்லையென்றாள் யசோதை.
“சொல்லப்போனால் நான் பேசிப்பழகிய முதல் அந்நிய ஆண் இவர்தான்.”
“அதாவது உங்களுக்கிடையே செக்ஸ் பற்றி எந்த பேச்சும் இருந்ததில்லை. பிறகெப்படி தொட விடுகிறீர்கள்!…
அவருக்கென்ன தேவை, பிடித்தம். உங்களுக்கென்ன தேவை, தயக்கம்ங்கிறதெல்லாம் பேசினால் தானே யசோதா ஒருவருக்கு ஒருவர் தெரிஞ்சுக்க முடியும். இல்லையா!?”
“செக்ஸில் பேசிப்புரிதல் அவசியம் யசோதா. அது தான் முதல் படி. எந்த பேச்சும் இல்லாமல் கணவன் மனைவியிடையே சும்மா மனசறிந்து நடந்து கொள்வதுங்கிறதெல்லாம் ஹம்பக் கட்டுக்கதைகள். நம்பாதீர்கள்.
அப்படி ஒருத்தர் மனசில இருப்பதை இன்னொருத்தர் தெரிந்து நடக்க முடியும்ன்னா.. நம்ம மக்களுக்கிடையே பாலியல் வெறுமை, டிப்ரஷன் பிரச்சினைகளே இருக்காதே.”
“பேசிப்பேசி தூண்டுதல் அவசியம்.
தீண்டுதல் இரண்டாவது படிதான்.
செக்ஸில் உடலும் உடலும் கூடுவது விசயமில்லை. மனம் ஒன்றி கூடுவது எப்ப நடக்கும்ன்னா நன்கு தூண்டப்பட்ட பிறகு”.
” ஸோ பார்த்துத் தூண்டுதல், பேசித் தூண்டுதல் இதெல்லாம் தீண்டுதலுக்கு முன் அவசியம்.”
“ஏன் தூண்டப்படனும்ன்னா, நம் உடலில் எத்தனை உணர்வு முடிச்சுகள் இருக்குன்னு தெரியுமா! அது அத்தனையும் தூண்டப்பட்டால் தான் அடுத்த ஸ்டெப்பான தீண்டப்படுவதில் உங்களுக்கு ப்லெஷர் கொடுக்கும்.”
“கிடாரோ வயலினோ எடுத்து வச்சு இசைக்கிறதுக்கு முன்னாடி அதிலிருக்க ஒவ்வொரு நரம்பையும் மிகச்சரியா தூண்டி டியூன் பண்ண வேண்டியிருக்ம்ல. அப்போதான் பெர்ஃபெக்ட்டான, இனிமையான இசையை கொடுக்கும் நம்ம உடலும் அப்படித்தான்.”
“செக்ஸ் வச்சுக்கிறது வெறும் பிள்ளைகளை பெற்றுக்கிற ப்ராசஸ்கானது மட்டும்தான்னா அதற்கு வெறும் ஆணுறுப்பும் பெண்ணுருப்பும் போதுமே. அங்கே உணர்வு முடிச்சுகள் ஏன் இருக்கு!?
பெண்ணின் கிளிட்டோரஸ் பகுதியில் மட்டும் ஆயிரம் உணர்வு நரம்பு முடிச்சுகள் இருக்கு. அதுதான் அந்த பகுதி அவ்வளவு சென்ஸிட்டாவானதா, தொட்டால் கூசும் படியும் இருக்கு.
பிள்ளை பெத்துக்கிறதுக்காகத்தான்னா நம் உடலில், இயற்கையில் இத்தனை உணர்வு முடிச்சுகள் இருக்க வேண்டிய அவசியமே இல்லையே.. அப்போ அங்கே அவைகளினால் நமக்கு எதோ வேற தேவைகள் இருக்குன்னுதானே அர்த்தம்.”
“அதுதான் ப்லெஷர். அந்த உணர்வு நரம்புகளால நமக்கு கிடைக்கக்கூடிய அதி அற்புதமான விசயம் ப்லெஷர். நம் உடலுக்கு நாம இந்த ப்லெஷரை கொடுக்கவேண்டியது அவசியம்.
‘நோட் த பாயிண்ட்’ அடுத்த உடலுக்கு நீங்கள் ப்லெஷர் கொடுப்பதை பற்றி நான் சொல்லவில்லை. உங்கள் சொந்த உடலுக்கு தேவை என்கிறேன்.”
“பொதுவா செக்ஸ் பிரச்சனைக்கு வரும் கணவன் மனைவி சொல்வது ஒன்னு இணையால் திருப்தியில்லை என்பது இல்லைன்னா இணையை திருப்தி படுத்தமுடியலைங்கிறதாத்தான் இருக்கும். “
“அடுத்த உடலுக்கு திருப்தி தருவது இருக்கட்டும். முதல்ல உங்க சொந்த உடலுக்கு திருப்திகிடைக்க செய்தீர்களான்னு இரண்டு பேரிடமும் தனித்தனியா கேட்டா நோன்னு தான் பதில் வரும்.”
“அதனாலதான் குறிப்பிட்டே சொன்னேன். நமக்கே நம்மை திருப்திபடுத்திக்கிறது, ப்லெஷர் கொடுத்துக்கிறது அதி முக்கியம்.”
“அது ஏன் முக்கியம்ன்னாநல்ல ப்லெஷர் கிடைக்கும் போது தான் நம்ம மூலை தூண்டப்பட்டு நம்மை ரிலாக்ஸா ஸ்ட்ரெஸ் ஃப்ரீயா ஆக்டிவா வச்சுக்கும் யசோதா. “
“ஸோ செக்ஸில கிடைக்கிற ப்லெஷர் வெறும் அந்த நேர திருப்திக்கானது மட்டுமில்ல. மனித உயிரை, உடலை, மைண்டை எந்த அழுத்தமும் இல்லாம, ஸ்மூத்தா ரிலாக்ஸா க்ரியேட்டிவா வச்சுக்கிறது கூட நம்ம உணர்வு நரம்புகளெல்லாம் தூண்டபட்ட நல்ல இன்ப உணர்வை கொடுக்கிறதாலதான்.
ஒரு நல்ல மெடிட்டேஷன்ல கிடைக்கிற அத்தனை நல்லதும் செக்ஸிலும் கிடைக்கும்.”
“சரி ஒரு நல்ல செக்ஸ் வச்சுக்க முதல்ல தூண்டப்பட்றது முக்கியம்ன்னு சொன்னேன்.
பேசித்தூண்டுவது போல ஒருவர் உடலை ஒருவர் பார்த்து இச்சையை கிளரச்செய்வது அவசியம் யசோதா.
நீங்கள் ஏன் பார்க்க அனுமதிப்பதில்லை!?
உங்கள் கணவரை பிறந்த மேனிக் கோலத்தில் பார்த்தது கூட உங்களுக்கு அதிர்ச்சியாச்சுன்னு சொன்னார். ஏன் எதனால்! “
“டாக்டர்ன்னு நினைக்காம ஒரு நல்ல சிநேகிதியா நினைச்சு மனசில இருக்கிறத வெளிப்படையா சொல்லுங்க யசோதா. அப்பதான் பிரச்சனை என்னங்கிறத கண்டுபிடிக்க முடியும்.”
யசோதை தனக்கேற்பட்ட கசப்பான அருவருக்கச்செய்த அனுபவங்களை சொன்னாள்.
“புரிகிறது. அதுக்குமுந்தி நீங்க எந்த வளர்ந்த ஆணின் பிறந்தமேனி தோற்றத்தையும் பார்த்ததில்லையா யசோதா!?”
யசோதை இல்லையென்றாள்
“சரி, இப்படி ட்ரை பண்ணி பாருங்க. கண்களை மூடி நிதானமா யோசிச்சு அப்புறம் பதில் சொல்லுங்க.
ஒரு இரண்டு வயசு ஆண் குழந்தை உங்க முன்னாடி ஆடையே இல்லாம வந்து நின்னா உங்களுக்கு அருவருப்பா தோணுமா!?”
யசோதை இல்லை இருக்காது என்றாள்.
“ஏன் யசோதா! அந்த இரண்டு வயசு குழந்தைக்கும் வளர்ந்த ஆணுக்கும் ஒரே மாதிரியான உடல் வடிவம் உறுப்புகள் தானேயிருக்கும். அப்படியிருந்தும்
இரண்டையும் உங்க மைண்ட் வேறுபடுத்தி பார்க்குதில்ல. ஸோ மைண்ட் செட் தான் காரணம் யசோதா. அப்படி மைண்ட செட் பண்ணி வச்சிருக்கிறது நீங்க தான்.
அடுத்தமுறை உங்கள் கணவரை அந்த கோலத்தில் பார்க்கும் போது அந்த இரண்டு வயசு குழந்தையை நினைத்து பாருங்க. தானா ஈஸியா பழகிடும். ட்ரை பண்ணுங்க.”
யசோதை சரி என்றாள்.
“அதேமாதிரி உங்களுக்கு உடற்கூச்சம் இருப்பதையும் ஈஸியா போக்கடிக்கலாம்.
உங்கள் உடலை ஆடையில்லாமல் கண்ணாடியில் பார்த்திருக்கீங்களா!? ”
யசோதை இல்லையென்று பதிலளித்தாள்.
“குளிக்கும் போது உடலைத்தொட்டு சுத்தம் செய்வார்களே ஒழிய அந்த உடல் மீது கவனம் வைத்திருக்ககூட மாட்டர்கள். வேற எதையெதையோ யோசிச்சு குளிச்சுமுடிச்சா போதும்ன்னு வெளியே வர்றவங்க தான் அதிகம்.
முழு நீள கண்ணாடியில் நம்மை நாமே பார்த்துக்கும் போது உடல் மேல நாம செட் பண்ணி வச்சிருக்க கூச்சம் குறையத்தொடங்கும்.”
“சரி, உடலை சுத்தம் செய்வற்காக தொடுவது தவிர சுய இன்பத்திற்காக தீண்டியதுண்டா!?”
இல்லையென்று தலையாட்டினாள் யசோதை.
ஏன் யசோதா! எவ்வளவு கட்டுபாட்டு சூழ்நிலையில் வளர்ந்திருந்தாலும் அட்லீஸ்ட் குளிக்கும் போதாவது உங்களுக்கு சுதந்திரமான நேரம் கிடைத்திருக்குமே.
தன்னைத்தானே தீண்டி இன்பம் கிடைக்க செஞ்சுக்கிறது தப்புன்னு நினைக்கிறீங்களா!? ”
- “எனக்கு சொல்லத்தெரில டாக்டர், எனக்கு இது பத்தி உண்மையிலேயே ஐடியா இல்லை”
“புரியுது, தலை பாரமா இருந்தா நெற்றியில் மெல்ல விரல்களை வைத்து நீவி ரிலாக்ஸ் பண்ணிக்கிறோமே. எந்த தயக்கமும் இல்லாம நெற்றியை விரல்களால் தொட்றோம்னா! நெற்றியைப்போல் கழுத்தைப்போல் கை கால்களை போல் வெஜினாவும் நம்ம சொந்த உறுப்பு தானே..
அப்படியெல்லாம் தொட்டு இன்பத்தை உணர்ந்துவிடக்கூடாதுன்னு இதுவும் நமக்கு நாமே செட் பண்ணி வச்சுக்கிறதுதான். எல்லாமே நாமா உருவாக்கிற மைண்ட் செட் தவிர வேறொன்னுமில்லை”
“பட் விரல்களால் தீண்டினால் உங்களுக்கு இருக்க வஜைனிஸ்மஸ்பிரச்சனையை உங்காளாலேயே போக்கிவிட முடியும்.”
“நம்ம விரல் நுனி இருக்கில்ல அது உணர்வுகள் அதிகம் பொதிந்திருக்கும் பகுதி. ஒன்னுமில்லை ஒரு விரல் நுனியால் மற்றொரு விரல் நுனியை சர்கிள் மோஷனில் மெல்ல நீவி பாருங்கள். மைண்ட் ரிலாக்ஸாகும்.
யோகாவில் விரல் நுனியில் முத்திரை பிடிக்கிறார்கள்ல.. அது மூளையை முடுக்கி நம்ம நரம்பு மண்டலங்கள ரிலாக்ஸ் பண்றதுதான்.
ஜெப மாலைகளில் மணிகள் ஒவ்வொன்றையும் விரல்களைக்கொண்டு உருட்டிக்கொண்டே இருப்பார்கள். அதுவும் இதற்கே.”
“ஆக்ஷ்வலா எங்கெங்கே தீண்டினால் இன்பவுணர்வு கிடைக்குதுன்னு நமக்கே தெரியவந்தால் தானே நம்ம இணைக்கு அதை சொல்லி தெரியவைக்கமுடியும். நம்ம சொந்த உடலைப்பற்றி நமக்கே புரிதல் இல்லைன்னா அவங்களுக்கு எப்படி புரியவைக்க முடியும் இல்லையா!? ”
“இன்னைக்கு தேதிக்கு நீங்க மட்டுமில்ல யசோதா.
இந்தியாவில முப்பது சதவீத பெண்கள் வஜைனிஸ்மஸ் பிரச்சனையில சிரமப்பட்றாங்க.”
“கொஞ்சம் ஓப்பனாகிட்ட நம்ம ஜெனெரேஷன்க்கே இப்படின்னா நமக்கு முந்தைய தலைமுறை பெண்களை யோசிச்சுப்பாருங்க.”
“சில ப்ரீத்திங் எக்ஸஸைஸ், ஃப்ளோர் எக்ஸஸைஸ்லாம் சொல்லித்தரேன். அதையும் செய்யுங்க யசோதா.”
“உங்க பிரச்சனைக்கு தீர்வு உங்ககிட்ட தான் இருக்கு..
எந்த மருந்து மாத்திரை மேஜிக்கும் செய்யமுடியாதை உங்களோட மன உறுதியைக்கொண்டு ஜெயிச்சிருக்கீங்க.அதுக்கு இந்த ரெக்கார் நோட்டே சாட்சி.
உங்களால நிச்சயம் முடியும்.”
பிறகும் ஒரே நாளில் அற்புதம். மேஜிக் நடந்துவிடவில்லை என்றாலும் மெல்ல மெல்ல மன இறுக்கம், வெஜினா இறுக்கம் தளரத்தொடங்கியது யசோதைக்கு.
இருவரும் அரக்கபரக்க வேலைகளை செய்து ஓடிக்கொண்டிருந்த, இரவில் களைத்துப்போய் வீடு திரும்பிக்கொண்டிருந்தற்கு இடையே வாரம் ஒரு நாள் தங்களுக்கான ரிலாக்ஸ் டைம் எடுத்து நிதானமாக தளர்த்திய மனநிலையோடு ஒரு சினிமா, எதாவதும் ஒரு பார்க்கில் பீச்சில் நடை அல்லது ஒரு சின்ன பயணமென்று வைத்துக்கொண்டு
தயக்கங்களை உதறிய கொஞ்சல்களோடும் குலாவல்களோடும் திருமணமாகி ஒன்பது மாதங்களுக்குப்பிறகு முழுமையான கலவி இன்பத்தை கண்டேவிட்டார்கள்.