மேலும் திமிர்ந்து
எவ்வித மேற்பூச்சுக்களுக்கும் கட்டுறாத இருளுக்குள் அழுத்துகிறது அக்கனவு.
இருளில் தான் எப்பொழுதும் நிகழ்கிறது அச்சம் கவ்வுதல்.
பொறி உமிழ கண்கள் சினவுவதை இருள விடலாம் அங்கே
உடைந்த அல்லது உடைத்தலுக்கு உள்ளாவதை
உயிரெச்சங்களென சொல்லாடலாம்.
பச்சைய மிணுக்கமில்லாத வாடல்களுக்கும்
வலிக்குமோ! உணர்வு ஏகுமோ !! என்பதையெல்லாம் அக்கனவிலிருந்து மீண்டதும் மறந்துவிடலாம்.