மேகங்களின் மோகத்தில் சிந்தியது மழை
முகில்வனம் அனைத்து முயங்கியது சாரல்
மூழ்காமல் எடுத்த முத்துகள் கோர்த்த சரம்
மடை திறந்த மகிழ்வில்
கூடி கலந்தது பூமி
தடை உடைந்த வேகத்தில்
வேட்கை தணிந்தது வேர்கள்
நீர் துளி தொட்ட செடிகள் எல்லாம் வெக்கப்பூ பூத்தது
பசலை பாய்ந்த இலைகள் எல்லாம் பச்சையம் வாங்கி ஜொலித்தது
முத்தமிட்ட ஈரக்காற்றில் இன்னும் சற்று சிலிர்த்தது
துள்ளி சென்ற வழி எல்லாம் தடம் பதிவாய் நனைத்து
கரை புரண்டாடி நதி துஞ்ச பயணமானது வெள்ளாமாய் ….