மைல் கல் கூடிய இடைவெளி
மிகை நீளல் ஆயினும்
இட வல சாய்வுகளில் இடுங்கிடாத சமன்
இட்டு நிரப்பி அளந்தாலும்
துலாபாரம் துலங்காத உன்மத்த உய்வு
அளவிலி பெருக்கு
தூவான சாரலோடு மிசைந்த குறும்பு கூதல்
மாடத்தில் ஒளிபெருக்கி
சுடர்ந்திடும் தீபத்தோடு கொண்டாடும்
நட்பாடல்
உறைக்காமல் உறைந்து
உயிர்மிசை மேவுதல்
குமிழிகள் உடைந்த பின்
சலனத்தில் அடவுபிடிக்கும்
நீர்நிலை துஞ்சிய மீன்களின்
துள்ளோட்டம்
விரல் வழி ஊடாடி
அகலெழி தேடும் வேட்கை இல்லா
வியங்கோள் விண்மீன்களின் விந்தை சிமிட்டல்களாய்