மொத்தத்தின் உள்ளடக்கமாய்
பின் எப்பொழுதோ புரட்டிப் பார்க்கவென
வரிகளின் இடுக்கில்
பாடம் செய்த புன்னகை
கம்பிவேலியில்
கால்பின்னிய
ஆட்டுக்குட்டியின் சுதந்திரம்
அப்புன்னகையின் வீரியத்திலும்
உண்டு உறைந்த
உமிழ் நீரின்
நூலாம்படைச் சொற்களில்
சிலந்தியின் நகர்வு
வெனிஸ் நகர வீதிகளை
கற்பனித்ததின் தார்சாலையில்
பெய்த மழையாகிறது
முட்கள் நகராக் கடிகையை
கவிதையாக்குவது