♥என்னோட பத்து

0
260

#என்னோடபத்து

1. “இடுக்கண் களைவதாம் நட்பு”ன்னு நம்ம தாடிவாலாவில் தொடங்கி
“என் உசிரக் கூடத்தானே
என் நண்பன் கேட்டா வாங்கிக்கன்னு சொல்லுவேன்” ரஜினி பாட்டு வரை ஏகத்துக்கு கேட்டு இருந்தாலும்
நம்ம நண்பனால் அது நமக்கு செய்ய கூடிய சிறிய உதவியாகவே இருந்தாலும் செய்யச்சொல்லி கேட்பதுவும் எதிர்பார்ப்பதுவும் கூடவே கூடாது.

2. முடியும்ங்கிற அளவைத்தாண்டி எதையும் இழுத்துப்போட்டு செய்து அவதியை இழுத்துக்கொண்டு உடல் நலத்தை கெடுத்துக்கொள்வதில்லை. எவ்வளவு முடியுமோ அதுவும் எப்ப முடியுமோ அவ்வளவு நிதானத்துக்கு செய்ய முடிவது மட்டுமே முடியும்.

3. அதெப்படி இன்னமும் நீ மாறாமல் இருக்கலாம்! வயதாவதன் முதிர்ச்சி வேண்டாமான்னு கேட்பவர்களுக்கு.

தேவையில்லை. நான் நானாகவும், எனக்கு பிடித்தமானதாகவும் இருப்பதே  எனக்கான நான் வாழும் வாழ்கையென்பதே பதில்.

4. அச்சோ! நாம நோ சொல்லிட்டா அவங்க வருத்தபடுவாங்களேன்னு மெனக்கெட்டு விருப்பமில்லாம மத்தவங்களுக்காக எதையும் செய்வதைக்காட்டிலும்
எனக்காக இதை கூட செய்யமாட்டியா!! எனும் டயலாக் அடிப்பவர்களுக்கு தயங்காமல் எடுத்தஎடுப்பில் NO சொல்லிவிடுவதே நல்லது.

5. எனக்கான செலவுகளை அடுத்தவர்கள் செய்வதும், மற்றவர்களுக்கும் சேர்த்து நான் செலவு செய்வதையும் ஒருபோதும் ஊக்குவிப்பதில்லை. அது சிறிய தொகை என்றாலும் திருப்பி கொடுத்தபின்/ வாங்கியபின் தான் மனசு ரிலாக்ஸ் ஆகும்
 கொடுக்கல் வாங்கல் வைத்துக்கொள்ளாமல். காசு விசயத்தில் கணக்காய் இருப்பது நல்லதோ நல்லது.

6. முன்ன அதிகம் இருந்ததும் இப்ப இல்லாமல் பார்த்துக்கொள்வதும் SENTIMENT. நிறைய வருத்தங்களைக்கொடுக்கும் கண்ணுக்கு புலப்படாத எதிரின்னு கண்டுகொண்டதும் எவரோடும், எதனோடும் அதீதமாக
 பற்றற்று இருக்கப்பழகிக்கொண்டேன்.

7. நெகடிவாக மட்டுமே யோசிப்பேன், பேசுவேன், செய்வேன் என்பவர்களிடமிருந்து ஒதுங்கி போய்விடலாமே. கூடவே புகைச்சலாக பொறாமையோடு பேசுகிறவர்கள், வேண்டுமென்றே சிக்கலில் மாட்டி விட்டு வேடிக்கை பார்பவர்கள் இவர்களையெல்லாம் இனம்கண்டு தள்ளியே இருந்துக்கலாம்.

8. எப்போதும் ஒரே மாதிரி சுழற்சியில் மாட்டிக்கொள்ளக்கூடாது. அது சீக்கிரம் அலுப்பு தட்டிடும். நம்மை நாமே புதுப்பித்துக்கொண்டே இருக்கனும். அந்த feel FRESH o FRESH ஆக
 வைத்திருக்கும் மனதை.

9. Suppress, Compromise இவைகளும்
 நம்மின் அதிருப்தியோடு பெரும்பாலும் அடுத்தவர்களை திருப்பிப்படுத்தவே செய்கிறோம் எனும் தெளிவு வேண்டுமே வேண்டும்.

10. மற்றவர்கள் கண்களுக்கு இதன் பெயர் மிகுந்த சுயநலம் என்பதாகத் தெரிந்தாலும் நம் சொந்த உணர்வுகளுக்கு முக்கியத்துவம் தருவது அதிமுக்கியம். நம் மகிழ்ச்சிக்கும் துக்கத்திற்கும் அடுத்தவரை சார்ந்திருத்தல் ஆகாது. என்றாலும் தனியே ஆனது நம் பயணமில்லை. மற்றவரோடு கூடவே நடந்தாலும் நமக்கான  தடங்களில் நம்மின் தவறவிட்டால் திரும்பகிட்டாத காலத்தின் சுவடுகள் இருந்தே ஆகனும்.

-புவனம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here