♥உடல், மன -அழகு, ஆரோக்கியம்

0
371

1.அதிகாலையில் எழுந்ததும் இரண்டு இலைகள் துளசி,
ஒரு பல் பூண்டு, கொஞ்சம் பனங்கற்கண்டு, மூன்று வறண்ட திராட்சை,
ஒரு டம்ளர் மிதமான சூட்டில் வெந்நீர் உள்ளுக்கு எடுத்துக்கொள்ளலாம்.

  1. கிரீன் டீ .. நான் அருந்தும் விதம் – இலையை கொதிக்க வைக்கும் போது, பெரிய நெல்லிக்காய் பேஸ்ட் ஒரு ஸ்பூன் கலந்து
    கொதித்து ஆறியதும் தேன் கலந்து அருந்துவது பொலிவு பிளஸ் நலம்…
    இதில் வடிகட்டிய சக்கையை முகத்துக்கு ஸ்க்ரப் போட்டுக்கொள்ளலாம் வாரத்தில் இருமுறை. 3.வெயில் காலத்தில் வெந்தய பொடி கொஞ்சம் உள்ளுக்கு எடுத்து வெந்நீர் குடிக்கலாம்.
    கூடவே தலைக்கு வெந்தய பொடி பேக் போட்டு வாரம் ஒரு முறை அலசுவதும் குளிர்ச்சியை கொடுக்கும்.

4.. சீரான மூச்சு பயிற்சி பத்து நிமிடம்

5.கவனத்தை நெற்றி பொட்டில் அல்லது முதுகு தண்டுவடத்தில் நிலைநிறுத்தி
10 நிமிடங்கள் மெடிட்டேசன் செய்வது நலம்.

6.காலாற காற்று வெளியில் 10 நிமிடம் நடந்து விட்டு வருவதும் உசிதம்.

7.அவசியம் அற்ற கண்டதை யோசித்து எந்நேரமும் குழம்பிகொண்டு இருக்காமல் இருத்தல்.

8.மனதிற்கு வருத்தம் தர கூடிய எதுவாக இருந்தாலும் சரி … ஒரு காகிதத்தில் நிறைக்க எழுதி, ஒரு முறை வாசித்து விட்டு கிழித்து கூடையில் போட்டு,
அடுத்த வேலையை பார்க்க போவது ஒரு நல்ல பயிற்சி.

9..கடல் அலைகள் மற்றும் பச்சை தாவரங்களை பார்ப்பது மன அழுத்தம் குறைக்க உதவும்.ஒரு வகையில் கண் வழி யோக பயிற்சி இது.

10.ஒரே மாதிரியான வாழ்க்கை முறையில் இருந்து கொஞ்சம் மாறி வேறு இடத்தில கொஞ்சம் இளைபாறிவிட்டு வருவது நலம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here